திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

விபத்து

Update: 2025-01-14 12:00 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சின்ன பொண்ணு (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சின்னப்பொண்ணு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த சின்னபொண்ணுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்காட்டுப் பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பொண்ணு பரிதாபமாகஉயிரிழந்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News