சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் பிரம்மண்டமான பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் கழக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவில் பத்தாயிரம் கரும்புகளைக் கொண்டு விழா திடல் மற்றும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 108 பானைகளில் பொங்கல் வைத்தனர். முன்னதாக பொங்கலுக்கான உலை கொதித்த நிலையில், அதில் பச்சரிசியை இட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வை பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அங்கு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த விழாவின் ஒரு பகுதியாக 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு பொதுச் செயலாளர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். மேலும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.