மது அருந்தி வாகனம் ஓட்டுகிறார்களா.... போக்குவரத்து காவல்துறை ஆய்வு
காவல்துறை
தஞ்சையில் பஸ் டிரைவர்களிடம் நவீன கருவி மூலம் சோதனை குடிபோதையில் வாகனத்தை இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்க பேருந்து மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இது தொடர்பாக நவீன கருவி மூலம் போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளை ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சசிதரன் மற்றும் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர்களை நிறுத்தி அவர்கள் குடிபோதையில் ஓட்டுகிறார்களா? என்பதனை நவீன கருவி மூலம் சோதனை செய்தனர்.ஏராளமான ஓட்டுநர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது மேலும் பேருந்து நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.