தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக் பயன்படுத்தாமை குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக் பயன்படுத்தாமை குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி குமாரபாளையத்தில் நடந்தது.
நாமக்கல் தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக் பயன்படுத்தாமை குறித்த சைக்கிள் விழிப்புணர்வு. பேரணி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் பள்ளியின் தேசிய பசுமை படை 250 தன்னார்வலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக பள்ளியில் பசுமை உறுதிமொழி எடுத்துக்கொண்ட தன்னார்வலர்கள் சேலம் மெயின் ரோடு, பேருந்து நிலையம், காவேரி நகர், உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அருகில் உள்ள பொதுமக்களுக்கு பசுமைப்படை தன்னார்வலர்கள் மூலம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக்கிற்கு மாற்றுப் பொருளான துணிப்பை பயன்படுத்துவது குறித்தும், தமிழக அரசின் மஞ்சப்பைத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு செய்தனர். பேரணியில் தேசிய மாணவர் படை அலுவலர் ஆண்டனி உள்ளிட்ட ஆசிரியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.