விழுப்புரத்தில் வழிப்பறி வாலிபர் கைது போலீசார் அதிரடி.

வழிப்பறி வாலிபர் கைது போலீசார் அதிரடி.

Update: 2025-01-15 05:08 GMT
மாவட்டத்தில், விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்த பெண்ணை தாக்கி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக, விழுப்புரம் தாலுகா, வளவனுார், கண்டமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிந்து, வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வந்தனர்.இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செல்வநாயகம், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கபாண்டியன், கவுதமன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து, வழிப்பறி கும்பலலை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை விழுப்புரம் அருகே கோலியனுார் கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அவர், விழுப்புரம் அடுத்த வி.அகரத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார், 20; என்பதும், மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து, ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 சவரன் நகைகள் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

Similar News