விழுப்புரம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Update: 2025-01-15 05:11 GMT
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் வினாடி, வினா போட்டி நடந்தது. இப்போட்டியில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவிகள் யுவஸ்ரீ, பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றனர். பேச்சு போட்டியில் 8ம் வகுப்பு மாணவி ஸ்ரீஹர்ஷினி 2ம் இடம் பெற்றார்.போட்டிகளில் வென்ற மாணவிகளை, கலெக்டர் பழனி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளி தாளாளர் ராஜசேகரன், பள்ளி முதல்வர் யமுனாராணி ஆகியோரும் பாராட்டினர்.

Similar News