ஆயுதபடை மைதானத்தில் விளையாட்டு போட்டிகள்.
மதுரை காவல் துறை சார்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மாநகர காவல்துறை சார்பாக இன்று (ஜன.15) ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் குழந்தைகளுக்கான பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான ஓட்டப்பந்தயத்தை துணை ஆணையர் தெற்கு அவர்களும் பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தை துணை ஆணையர் வடக்கு அவர்களும் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் காவல் உதவி ஆணையர் ஆயுதப்படை மற்றும் காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.