சேலம் கிராம பகுதியில் களை கட்டிய மாட்டுப் பொங்கல் விழா

பொதுமக்கள் உற்சாகம்

Update: 2025-01-15 12:05 GMT
பொங்கல் பண்டிகை மறு நாளான இன்று உழவர் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் தமிழகம் முழுவதும் கோலவாலமாக கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மாட்டுப்பொங்கல் தமிழக முழுவதும் கிராமப்புறங்களில் இன்று காலை முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் பண்டிகையான இன்று காலையிலேயே ஏரி, குளங்களுக்கு மாடுகளை அழைத்து சென்று அதனை வளர்ப்பவர்கள் தண்ணீரில் குளிப்பாட்டினர். பின்னர் மாடுகளுக்கு சந்தானம், குங்குமம், வைத்து கழுத்தில் சலங்கை மணிகட்டியும் மாலை அணிவித்தும் அலங்கரித்தனர். தொடர்ந்து மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்காரம் செய்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்தனர். படைக்கப்பட்ட உணவுகளை மாடுகளுக்கு கொடுத்து வழிபட்டனர்.

Similar News