செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் மாவட்ட எஸ்பி கலந்து கொண்டார்
இந்து இஸ்லாமியர்களோடு போலீசார் மண்பானையில் பொங்கல் பொங்கி கொண்டாட்டம். மாவட்ட எஸ்பி பங்கேற்றார் . மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கிருத்துவ இஸ்லாமியர் பங்கேற்றனர்;
. செம்பனார்கோவில் காவல் நிலைய போலீசார் அனைவரும் ஒரே நிறத்தில் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து மியூசிக்கல் சேர் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து சினிமா பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர். புதுப் பானையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையல் இட்டு இந்து கிறித்தவ இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழாவில் சூரிய பகவானுக்கு படையல் இட்டு வழிபாடு நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.