மதிமுக சார்பில் சீமான் மீது போலீசில் புகார்

குமாரபாளையம் காவல் நிலையத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தனர்;

Update: 2025-01-17 15:40 GMT
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையி ல் திராவிடர் கழக நிறுவனரும் பகுத்தறிவாளருமான தந்தை பெரியாரை அவதூறாக பேசினார் இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது மேலும் தமிழக முழுவதும் தந்தை பெரியாரை அவதூராக சீமான் பேசியதை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமானை கைது செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் நீலகண்டன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரவணன் திராவிடர் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் சரவணன் பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் ரமேஷ் ஆகியோர் இணைந்து புகார் மனு அளித்தனர் புகார் மனுவை பெற்ற குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதன் பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கூறுகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யும் வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Similar News