திக்கிறையான வீட்டு உரிமையாளருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிதி அளிப்பு
தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சி மேட்டு மெஷின் தெருவில் கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி உள்ளிட்ட நிவாரண உதவிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா .எம்.முருகன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்;
'மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச் சிறு ஊராட்சி வேட்டி மெஷின் தெருவை சார்ந்த சாந்தகுமாரி கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.இவர்களது கூரை வீடு நேற்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எறிந்ததில் இவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சாந்தகுமாரிக்கு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் அரிசி வேட்டி சேலை காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இதில் ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமிநாதன் ,ராஜா ,ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.