தாய் தந்தையருக்கு பள்ளி மாணவ மாணவிகள் பாத பூஜை

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கும் ஆசீர்வாத திருநாள் விழாவை முன்னிட்டு 300 மாணவர்கள் தங்கள் தாய், தந்தையருக்கு பாத பூஜை செய்து, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிர்வாதம் பெற்றனர்;

Update: 2025-01-17 18:12 GMT
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நிகழாண்டு 300 மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிபெறும் ஆசிர்வாத திருநாள் நிகழ்ச்சி பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது. பள்ளி செயலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்த கொண்ட தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவர்களுக்கு அருளாசி வழங்கி எழுதுபொருள்கள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் தங்கள் தாய்தந்தையருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அட்சதை தூவி மல்க ஆசீர்வதித்தனர். தொடர்ந்து வரிசையாக நின்ற ஆசிரியர்களிடம் மாணவர்கள் வரிசையாக சென்று ஆசிர்வாதம் பெற்றனர். மாணவர்களுக்கு மலர் தூவி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சரஸ்வதி தேவி படங்களின் முன்பு வணங்கி ஆசீர்வாதம் பெற்றபின் சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Similar News