தரங்கம்பாடி பகுதியில் இருபதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பருவம் தவறி பெய்த கனமழையால் 20000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம். வாய்க்காலுக்கும் நிலத்திற்கும் இடையில் குழாய்கள் அமைத்து தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் இன்று காலை வரை 12 சென்டிமீட்டர் மழையும் செம்பனார்கோவில் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் நாச்சிக்கட்டளையில் 300 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களும் கதிர் முற்றும் தருவாயில் உள்ள பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியது. கனமழையால் தரங்கம்பாடி தாலுகாவில் திருக்கடையூர், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், காழியப்பநல்லூர், தலைச்சங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20,000 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் விவசாய நிலங்களில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் வடிந்தாலும் அறுவடை செய்ய கூடுதல் தொகை செலவாகும் நிலையில் உரிய மகசூல் கிடைக்காது என்பதால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கி முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.