பொது இடத்தில் பேனர் த.வெ.க., நிர்வாகி மீது வழக்கு

த.வெ.க., நிர்வாகி மீது வழக்கு;

Update: 2025-01-20 07:26 GMT
விக்கிரவாண்டி: பொது இடத்தில் வாழ்த்து பேனர் வைத்த விஜய் கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கெடார் அடுத்த வீரமூர் அரசு துவக்கப் பள்ளி அருகே பொங்கல் வாழ்த்து விளம்பரம் பேனர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனரை அகற்றிய போலீசார், பேனர் வைத்த த.வெ.க., நிர்வாகியான வீரமூரைச் சேர்ந்த சஞ்சய்,20; மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News