மேம்பாலம் திறப்பு விழா பணிகள் தீவிரம்

பள்ளிபாளையத்தில் புதிய மேம்பாலம் திறப்பு விழா பணிகள் தீவிரமடைந்துள்ளது;

Update: 2025-01-20 12:27 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மாவட்டத்தின் எல்லை பகுதியாக ஈரோட்டில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. பள்ளிபாளையம் சுற்றுவட்ட பகுதி முழுவதும் விசைத்தறி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. பள்ளிபாளையத்திலிருந்து உற்பத்தியாகும் ஜவுளிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அருகிலே ஈரோடு மாவட்டம் இருப்பதால் தினசரி ஈரோட்டிற்கு பல்வேறு பணிகளுக்கும்,  பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கும் பொது மக்களும் வியாபாரிகளும் சென்று வருகின்றனர்.  மேலும் பள்ளிபாளையம் வழியே ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாகவும், இந்த சாலை அமைந்துள்ளது..  கடந்த சில ஆண்டுகளாகவே நகரில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.  இதன் காரணமாக உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .. மேலும் இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்ததை இதனை அடுத்து நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் டீச்சர்ஸ் காலனி சாலைகளில் இருந்து காவிரி ஆற்று பாலம் வரையிலும்,  புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது..  இதற்கான பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேம்பால கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது . இதனையடுத்து மேம்பாலம் பகுதியில் மீதமுள்ள சிறிய அளவிலான பணிகள் மற்றும் வெள்ளை வர்ணம் பூசும் பணிகள்,  சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணி, வேகத்தடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது . பிப்ரவரி மாத துவக்கத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த பாலம் திறக்கப்பட்டால் பள்ளிபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து போக்குவரத்து பாதிப்பு இல்லாத நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.....

Similar News