சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
காங்கேயத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது;
காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 22) தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர்கள் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கில் செந்தில் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.