திமுக தொழிற்சங்க நிர்வாகியை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகியை கண்டித்து ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் , திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்;
. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரே 35 ஆண்டுகளாக அம்மையப்பர் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் என்ற பெயரில் ஓட்டுனர்கள் ஆட்டோ ஒட்டி வருகின்றனர். இதனிடையே அதே பகுதிக்கு அருகில் திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் ஆதரவோடு புதியதாக 12 ஆட்டோக்கள் கொண்டுவரப்பட்டு சங்கம் துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று திமுக நிர்வாகி ஸ்ரீதரை கண்டித்து அம்மையப்பர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்கத்தின் தலைவர் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை திமுக நிர்வாகி ஸ்ரீதரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் (விசிக) கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்க நினைக்கும் திமுக நிர்வாகிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பேராசிரியர் முரளிதரன் நாம் தமிழர் காளிதாஸ் உட்பட பல்வேறு இயக்கத்தினரும் கலந்து கொண்டனர்.