விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மூலனூர் அருகே விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்;

Update: 2025-01-21 02:38 GMT
மூலனூர் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களில் தனியார் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக உரிய ஆவணங்கள், அனுமதி இல்லாமல் மின்கம்பங்கள் நடுவதற்கு கனரக எந்திரங்களுடன் பணியாளர்கள் வந்ததை அறிந்த மக்கள் அந்த வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். வட்டாட்சியர் ஆய்வு செய்து பணி நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் எந்திரங்களுடன் வந்து கம்பங்கள் அமைக்க முயற்சி செய்தனர். விவசாயிகள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

Similar News