நீர்நிலைகளில் அருகே உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுக்கு முன்பு ஸ்டாலின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெரியவரால் பரபரப்பு ஏற்பட

நீர்நிலைகளில் அருகே உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுக்கு முன்பு ஸ்டாலின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெரியவரால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2025-01-21 08:19 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிலைகளில் அருகே உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுக்கு முன்பு ஸ்டாலின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெரியவரால் பரபரப்பு ஏற்பட்டது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் கண்மாய் நீர் வழி பாதை அருகே அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஏழுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் குடியிருப்புகளை அகற்றக் கோரி அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு மாற்று இடமும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியிருப்புகளை ஜேசிபி இயந்திரத்துடன் அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட குடும்பத்தினரும் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஸ்டாலின் அரசு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை வைத்து அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது ஏழு அருந்ததியர் குடும்பத்திற்கு ஆதரவாக விவசாயி மூர்த்தி என்பவர் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டாலின் அரசுக்கு எதிராக திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் அருகே இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முதியவர் விவசாயியை காப்பாற்றினர். மயக்கம் அடைந்த விவசாயியை ஆட்டோவில் ஏற்றி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் அருந்ததியர் மக்களுக்கு மேலும் பத்து நாட்களுக்குள் குடியிருப்புகளை அகற்றுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் திரும்பி சென்றனர். அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சுந்தரபாண்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News