உதவித்தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள்மறியல் போராட்டம்

ஆந்திராவில் வழங்குவது போல் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் , 70க்கும் மேற்பட்டோர் கைது;

Update: 2025-01-21 09:37 GMT
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் - சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க அலுவலகத்தின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். ஆந்திராவில் வழங்குவது போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 6000 மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 10,000 , படுக்கையில் வாழ்ந்து வரும் நபர்களுக்கு 15,000 என உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 50 சதவீதம் 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையை தொடர்ந்து 8 மணி நேரம் பனிதளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News