பரிமள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற மட்டையடி ஐதீக திருவிழா

கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த பெருமாளை மட்டையால் அடித்து விரட்டிய தாயாரின் துவாரபாலகிகள்; பரிமள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற மட்டையடி ஐதீக திருவிழாவை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்;

Update: 2025-01-22 03:34 GMT
. காலையில் வீட்டை விட்டு சென்று நாள் முழுவதும் கோபியர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிவிட்டு பெருமாள் இரவு வீடு திரும்பிய போது, தாயாரின் பாதுகாவலர்களான துவார பாலகிகள் தாயாரின் உத்தரவின் பேரில் பெருமாளை உள்ளே அனுமதிக்காமல், மஞ்சள் கலந்த நீரில் தோய்த்து வாழை மட்டையால் அடித்து துரத்தியதாகவும், பின்னர் பெருமாள் நம்மாழ்வாரிடம் உதவி கோரியதால், நம்மாழ்வார் சமரசம் பேசி இருவரையும் சேர்த்து வைத்ததாகவும் ஐதீகம். விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்ந்தால் மட்டுமே பேரின்பத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் ஐதீக திருவிழாவான மட்டையடி உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்றது. இதில் உற்சவர் ரங்கநாதர் பெருமாளை பக்தர்கள் சுமந்து கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்படும்போது, அங்கே வாழை மட்டையை வைத்துக்கொண்டு நின்றவர் மட்டையால் அடித்து விரட்டுவதாகவும், பின்னர் ராஜகோபால் வாசல், கட்டை கோபுர வாசல், தாயார் சன்னதி வாசல்களை கடந்து உள்ளே சென்று, நம்மாழ்வாரிடம் உதவி கேட்பதாகவும், நம்மாழ்வார் தாயாரிடம் பேசி சமரசம் செய்து வைப்பதாகவும் ஐதீக திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ராப்பத்து உற்சவம் நிறைவடைந்த நிலையில், நேற்று இயல் சாற்றுமுறை உற்சவம நடைபெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்ற மட்டையடி உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

Similar News