கோவை: திருவள்ளுவர் பற்றி முதல்வரின் பேச்சை கண்டிக்கத்தக்கது !

லண்டன் சென்று திரும்பிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Update: 2025-01-22 08:08 GMT
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசியவர் பிரட்டன் பாராளுமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்தேன், பின்பு அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களுக்கான கூட்டமும், ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப் பிஜேபி ஆதரவாளர்களுக்கான பிரிட்டன் அமைப்பு கூட்டத்திலும் பங்கேற்று வந்திருக்கிறேன், இங்கு எனக்கு அன்பான வரவேற்பு கொடுத்துள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவரையும் வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள் என்று மாநிலத்தின் முதல்வர் கூறியிருக்கிறார், திருவள்ளுவர் திருக்குறளில் இந்து ஞான மரபின் கருத்துக்களை தான் கூறியிருக்கிறார். கடவுள் வாழ்த்து என்று தனியான ஒரு அதிகாரம், அதேபோல திருக்குறளில் பல்வேறு இடங்களில் இந்து மத கருத்துக்களை திருவள்ளுவர் வெளிப்படுத்து இருப்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல வள்ளலார் ஹிந்து சமய ஞானத்தினுடைய ஒரு கூறாக அவர் விளங்கியவர் அதை இவர்களின் அரசியலுக்காக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

Similar News