வர்த்தக சங்க ஆண்டு விழாவில் முதல்வர்
மதுரை தொழில் வர்த்தக சங்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று( ஜன.22) மதியம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பேசினார். உடன் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தளபதி எம்எல்ஏ, விக்கிரம ராஜா மற்றும் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக விரகனூர் பகுதியிலிருந்து விழா நடைபெறும் நிகழ்விடம் வரை வழிநெடுக திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.