கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வினா-விடை புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ.

கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வினா-விடை புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ.;

Update: 2025-12-19 13:45 GMT
கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வினா-விடை புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ. ஒவ்வொரு மாணாக்கர்களின் வாழ்க்கையில் மேல்நிலைக் கல்வி என்பது அத்தியாவசியமாகிறது. மேல்நிலைக் கல்வி பயின்று தேர்ச்சி பெறும் மதிப்பெண்களை வைத்தே அவர்களது வாழ்க்கை பாதை தீர்மானிக்கப்படுகிறது. எனவே மேல்நிலை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் மாணாக்கர்களுக்கு தேர்வின் போது உபயோகமாக இருப்பதற்காக வினா - விடை புத்தகங்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன தாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வினா-விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவிகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை எம்எல்ஏ இளங்கோ விளக்கி எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியின் நிறைவில் மாணவிகள் அனைவருக்கும் செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் வினா - விடை புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ இளங்கோ.

Similar News