தனியார் கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - கிழக்கு காவல்நிலைய காவல் துறையினர் விசாரணை...*
தனியார் கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - கிழக்கு காவல்நிலைய காவல் துறையினர் விசாரணை...*
விருதுநகரில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - கிழக்கு காவல்நிலைய காவல் துறையினர் விசாரணை... விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று வழக்கம் போல கல்லூரிக்கு மாணவ மாணவிகள் வந்துள்ளனர். கல்லூரி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாக கடிதம் வந்தது. இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தது. தகவலின் பெயரில் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரியின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் வீட்டிற்கு திரும்பச் சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விருதுநகரில் உள்ள தனியார் மழலையர் பள்ளி மற்றும் தனியார் சிபிஎஸ்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.