ராமநாதபுரம் போக்குவரத்து வார விழா நடைபெற்றது

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் 36 வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-01-22 09:17 GMT
ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 36 வது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி புதிய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது லைசென்ஸ் பெற்ற பிறகு வாகனம் ஓட்டுவது, பேருந்து பயணத்தின்போது படியில் பயணம் செய்வதை தவிர்ப்பது, தலைக்கவசம் அணிந்த இருசக்கர வாகனம் ஓட்டுவது, சாலையில் வளைவுகளில் பாதுகாப்பாக செல்வது, சாலை விளக்கு நம் விளக்கின் ஒளி விளக்காக முன்னெடுத்துச் செல்வது, என்றும் மது அருந்து வாகனம் இயக்க மாட்டோம் என்றும் அதிவேக வாகனம் இயக்கக் கூடாது என்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி செல்ல மாட்டோம் என்றும் சாலையில் செல்லும்போது வாகனத்தை இடது புறமாக இயக்கவும் செல்ஃபோன் பேசி இருசக்கர வாகனத்தை சக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது சாலை விதிகளை பின்பற்றி செல்வது குறித்தும் பல்வேறு அம்சங்களை கொண்ட உறுதிமொழி இதில் இடம் பெற்றது இந்நிகழ்சியில் ராமநாதபுரம் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் முருகன் ராமநாதபுரம் தாசில்தார் சுவாமிநாதன் உதவி கோட்ட பொறியாளர் சௌந்தர்ராஜன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News