அருப்புக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
திமுக ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு உள்ளது அந்த வெறுப்பு 2026 இல் வாக்கு சாவடியில் இரட்டை இலை சின்னங்களாக மாறும் - அருப்புக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு*
திமுக ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு உள்ளது அந்த வெறுப்பு 2026 இல் வாக்கு சாவடியில் இரட்டை இலை சின்னங்களாக மாறும் - அருப்புக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் அருப்புக்கோட்டை நகர செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026இல் ஆட்சி அதிமுக அமைப்பது உறுதி. கொடி பிடித்து கோஷம் போட்டு இங்கு நிறைய கட்சிகள் உள்ளது கொடி பிடித்தவர்கள் கோஷம் போட்டவர்கள் எல்லாம் இந்த நாட்டில் ஆட்சியைப் பிடித்தவர்களா என்றால் யாரும் ஆட்சி பிடிக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற மாபெரும் சக்தி மட்டும் தான் திரைப்படத் துறையில் இருந்து எம்ஜிஆர் மன்றத்தை உருவாக்கி எம்ஜிஆர் மற்றும் நிர்வாகிகள் பிடிப்போடு செயல்பட்டு உழைத்து மன்றத்தை உருவாக்கி அந்த மன்றம் மட்டும்தான் கொடிபிடித்து ஆட்சியப்படுத்த ஒரே மன்றம். அமெரிக்காவில் இருந்தபடி தானும் வெற்றி பெற்று அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எனக்கு பின்னால் நூறாண்டுகளுக்கு அதிமுக இருக்கும் என கூறினார்கள். தற்போது அருப்புக்கோட்டையில் 13,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம் என்றால் அதுதான் எம்ஜிஆர் போட்ட விதை. 2026 ல் இரட்டை இலை ஆட்சி அதிமுக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திமுக ஆட்சி மீது மிகப்பெரிய அதிருப்தி வெறுப்பு கோபம் உள்ளது. இந்த வெறுப்பு 2026 இல் வாக்குச்சாவடியில் இரட்டை இலை சின்னங்களாக மாறும். சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநிலத்தை பெற்றுக் கொடுத்தவர். ஆனால் அங்கு ஆட்சி மாற்றம் வந்தது. அடுத்த மாதம் மழை வருவதையே யாராலும் கூற முடியாது. இப்போது சூரியன் பளீர் என தான் தெரியும். உச்சி வெயில் மண்டையை பிளக்கும். திடீரென கூட்டணி சேரும். அதிமுக ஆட்சி மலரும். திமுக ஆட்சி அகற்றப்படும். 2026 இல் நம் ஆட்சி தான் நம்பிக்கையோடு தெம்பாக இருங்கள். ஒரு குடும்பம் மட்டுமே நன்றாக இருக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி ஒட்டுமொத்த மக்களும் நன்றாக இருக்கக்கூடிய ஆட்சி அதிமுக ஆட்சி. கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தை உடைய ஆட்சி அதிமுக ஆட்சி. அதிமுக என்பது ஒரு மாபெரும் கப்பல். அண்ணா திமுக என்பது தேர்தல் களத்தில் நின்று விளையாடிய கூடிய கட்சி. மூளை முடுக்கெல்லாம் அதிமுக கொடி பறந்து வருகிறது. பாலியல் பலாத்காரம் கஞ்சா குடி போதை அனைத்தும் நடப்பது திமுக ஆட்சியில் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என கூறியவர்கள் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிப்போம் என ஆம்லெட்டை திருப்பிப் போட்டது போல கூறுகிறார்கள் இதை மக்கள் நம்ப தயாராக இல்லை என பேசினார்.