அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வர முடியும்- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வர முடியும்- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வர முடியும்- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் விளக்கம். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காணியாளம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இரவு நடை பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், தலைமை கழக பேச்சாளர் ஜலேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் மட்டும்தான் கட்சித் தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்ப்புக்கு வர முடியும். திமுகவில் வாரிசு அடிப்படையில்தான் பதவிக்கு வர முடியும். இதனை பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்து வரும் தேர்தலில் சரியான முடிவினை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்