கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கிய பதநீர் சீசன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கிய பதநீர் சீசன்.

Update: 2025-01-22 13:06 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மத்துர், போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை, ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களை நம்பி ஆயிரக்கணக்கான பனை தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது இந்த பனை மரங்களில் இருந்து பதநீர் எடுக்கும் பணிகளில் பனை மர தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பதநீரை தற்போது சாலை ஓரங்களில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது பதநீர் சீசன் துவங்கியுள்ளது. மருத்துவ குணமடைய பதநீரை மதிப்புள்ள பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்து பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என மனைமரத் தொழிலாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News