ஆம்பூர் அருகே அதிகாலையே இருவேறு விபத்துகள், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழந்து விபத்து,
ஆம்பூர் அருகே அதிகாலையே இருவேறு விபத்துகள், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழந்து விபத்து,;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அதிகாலையே இருவேறு விபத்துகள், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழந்து விபத்து, அதேபோல் டிராக்டர் மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர கடைக்குள் புகுந்து வீதியில் இருந்த மின்சார கம்பத்தின் மோதி விபத்து.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள குளிர்பானங்கள் விற்கும் கடையிற்குள் புகுந்து, வீதியில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியுள்ளது, இதில் மின்சார கம்பம் உடைந்த நிலையில், டிராக்டர் மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள கானாறு பள்ளத்தில் விழுந்தது, இந்த விபத்தில், டிராக்டர் மற்றும் லாரி ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இவ்விபத்து குறித்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். அதே போல் மின்னூர் டான்சி பகுதியில் அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாரத்குமார், நாகேந்திர பிரசாத் என்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மேலும் மின்னூர் பகுதியில் காலை ஏற்பட்ட இருவேறு விபத்துகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..