ராமநாதபுரம் நூதன முறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

பரமக்குடியில் வீட்டுமனை பிளான் வாங்குவதற்கு பண பரிவத்தனை மூலம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது;

Update: 2025-01-23 08:23 GMT
ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளராக இருந்து வருகிறார்.அவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமான பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டு மனைகளுக்கு பரமக்குடி நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெற பரமக்குடி நகராட்சியில் பிளான் அப்ரூவல் கட்டணமாக ரூ.76,850/-த்தை கடந்த செலுத்தியுள்ளார். பின்னர் இது தொடர்பாக மேற்படி ப பரமக்குடியில் நகராட்சி அலுவலகத்தில் டவுன் பிளானிங் ஆபீசராக பணிபுரியும் . பர்குணனை மனுதாரர் சந்தித்து விவரம் கேட்டபோது ஒரு வீட்டு மனைக்கு ரூ.5,000 /-ம் வீதம் 4 வீட்டு மனைக்கு மொத்தம் ரூ.20,000/-த்தை எனக்கு தனியாக கொடுத்தால் தான் பிளான் அப்ரூவல் தயார் செய்து பரிந்துரை செய்வேன் எனக்கூறியுள்ளார். அதற்கு மனுதாரர் ஏற்கனவே நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணம் ரூ.76,850/-த்தை கட்டியாச்சு, மேலும் உங்களுக்கு ரூ.20000/-ம் கொடுக்க என்னால் முடியாது எனவே தயவு செய்து தனது பிளான் அப்ரூவலை பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். பின்னர் மனுதாரர் நேற்று மீண்டும் பரமக்குடி நகராட்சி அலுவலகம் சென்று பிளான் அப்ரூவல் குறித்து கேட்ட போது ஏற்கனவே தங்களிடம் கூறியவாறு 4 வீட்டு மனைக்கு அப்ரூவல் கொடுப்பதற்கு ரூ.20,000/-த்தை இன்றைக்கே பிளான் அப்ரூவல் செய்வேன் இல்லையெனில் அது சம்மந்தமான பைல்கள் அப்படியே தான் கிடக்கும் என மனுதாரரிடம் காரராக கூறிவிட்டார். எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸ்ஸில் புகார் செய்தார். இதைதொடர்ந்து பரமக்குடி நகராட்சிக்கு சென்ற புகார்தாரரிடம் மேற்படி பணத்தை கையில் கொடுக்க வேண்டாம் G pay ல் அனுப்பும்படி பர்குணன் கேட்டுக்கொண்டதால் லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரூ.20,000/- லஞ்ச பணத்தை G pay ல் அனுப்பிய பின்பு மேற்படி G pay ல் லஞ்சம் கேட்டுப்பெற்ற பரமக்குடி டவுன் பிளானிங் ஆபீசர் பர்குணனை கையும் களவுமாக அவரின் மொபைல் போனுடன் சேர்த்து வளைத்து பிடித்து விசாரித்து பின்னர் கைது செய்தனர்

Similar News