மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி
மயிலாடுதுறை சார்பதிவாளரைக் கண்டித்து அலுவலகத்தின் உள்ளே பெண்மணி தீக்குளிக்க முயற்சி;
மயிலாடுதுறை மதுரா நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷின் பூர்வீக சொத்தை அவரது அண்ணன் நடராஜன் ரூ.80 லட்சம் பாகம் தருவதாக 2023 ஆம் ஆண்டு செட்டில்மென்ட் எழுதிக்கொண்டுள்ளார். ஜெயபிரகாஷூக்கு பாகம் அளிக்காமல் இடத்தை விற்பனை செய்யக்கூடாது என்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு மயிலாடுதுறை சார்பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர், வழக்கு நடந்துவரும் நிலையில் ஒருசில தினங்களுக்கு முன்பு வேறு நபருக்கு நடராஜன் சொத்தினை விற்றுவிட்டு ஜெயபிரகாஷூக்கு பணம் கொடுக்கவில்லை. பத்திரப்பதிவுசெய்த சார்பதிவாளர் பார்வதியிடம் சென்று ஜெயபிரகாஷ் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் சார்பதிவாளர் அலைக்கழிக்கவிட்டுள்ளார், இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயபிரகாஷ்(50) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா(48) மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பத்திரப்பதிவுசெய்தது சட்டவிரோதம் உடனே ரத்து செய்ய கேட்டுள்ளனர், அதற்குஅவர் மறுத்துள்ளார், இதைக் கேள்விப்பட்ட சுலோச்சனா தான் கொண்டுவந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றிக் கொண்டு தீவைக்க முயச்சித்துள்ளார், உடனடியாக அலுவலகத்தில் இருந்தவர்கள் தீப்பெட்டியை பிடுங்கி வீசினர், பக்கத்து கட்டிடத்தில் உள்ள தீயணைப்புத்துறையினர் சென்று அப்பெண்மணிமீது தண்ணீரை ஊற்றி தீப்பிடிக்காமல் தடுப்பு நடவடிக்கை எடுத்தனர். சுலோச்சனா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில். மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.