திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறித்து கூட்டத்தில் 100 கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்;

Update: 2025-01-25 02:14 GMT
திருப்பத்தூர் மாவட்டம் விவசாய நிலங்களை அழிக்கும் பன்றிகளை கொல்ல ஓநாய் இனத்தைக் கொண்டு வந்து காட்டிற்குள் விடுங்கள் என விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவரவர் பிரச்சினை குறித்து விவாதங்கள் நடைபெற்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு சிலர் கூறுகையில் அங்கு இங்கு கடன் வாங்கி செய்யும் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் வந்து சேதப்படுத்தி எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது அந்த பன்றிகளை நாங்கள் அடித்து கொன்றால் வழக்கு தொடர்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தால் அவர்களும் வந்து அதற்கான தீர்வு நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது. எனவே வருடத்திற்கு 32 குட்டிகளை ஈன்று கூட்டம் கூட்டமாக வந்து எங்கள் விவசாய நிலங்களை அழிக்கும் பன்றிகளை கொல்லும் வழக்கில் இருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ளவும் விவசாய நிலங்களை பாதுகாக்கவும் பன்றிகளை கொல்லும் ஓநாய் இனத்தை கொண்டு வந்து காட்டுப் பகுதிக்குள் விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதே போன்று பாலாற்று படுகைகளில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் மணல் கடத்தல் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது மணல் கொள்ளை குறித்து தகவல் கொடுத்தால் அவர்கள் சென்ற பிறகு இவர்கள் வருகிறார்கள். ஏற்கனவே மணல் கொள்ளை சம்பந்தமாக சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டிருக்கிறான் மணல் கொள்ளை சம்பந்தமாக புகார் கொடுத்தால் தனி நபருக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுத்து விவசாய நிலங்களுக்கு காரணியாக இருக்கும் ஆற்றுப் படுகைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதே போன்று மற்றொரு விவசாயி மானிய விலையில் கொடுக்கப்படும் வேப்ப மரங்களை விட்டுவிட்டு விலைமதிப்பு உள்ள சந்தன மரம் செம்மரம் தேக்கு மரம் போன்ற மரங்களை கொடுத்து உதவுங்கள் அதேபோல விவசாயம் செய்வதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார்கள் வேலை ஏதும் செய்யாமல் அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி செல்கிறார்கள் அவர்களை விவசாயம் செய்ய அரசு அனுப்பி வைத்தால் அரசு கொடுக்கும் தொகையும் அவர்களுக்கு கிடைக்கும் கூடுதலாக விவசாயிகளும் ஒரு தொகை கொடுத்தால் தற்பொழுது அரசு கொடுக்கிற கூலியை விட அவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் எனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மற்றொரு விவசாயி கூறுகையில் பாலாற்றில் நுரை பொங்கி வழிகின்றது இதனால் விவசாயம் பாதிக்க படுகின்றது இதை குறித்து பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்

Similar News