திருப்பத்தூரில் வாகன ஓட்டுனர்கள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

திருப்பத்தூரில் வாகன ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கு பூங்கொத்து கொடுத்து கௌரவித்த ஆட்சியர்;

Update: 2025-01-25 02:36 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வாகன ஓட்டுனர்கள் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர் நடத்துனர்களுக்கு ஆட்சியர் தர்ப்பக ராஜ் பேஜ் அணிவித்து பூங்கொத்து கொடுத்து கௌரிவித்தார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்கள் தினத்தை முன்னிட்டு வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி வழிகாட்டுதல்படி திருப்பத்தூர் பனிமனை கிளை மேலாளர் குமரன் தலைமையில் ஓட்டுநர்கள் நடத்துனர்களை கௌரிக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பங்கேற்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்ச் அணிவித்து சால்வை அணிவித்து ரோஜா பூக்களை கொடுத்து கௌரவித்து வாழ்த்து தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Similar News