ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்-மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி*;

Update: 2025-01-25 15:40 GMT
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்-மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4 வது சனிக்கிழமையன்று நெகிழி கழிவிகளை அகற்றி முறைப்படி அப்புறப்படுத்தும் மாபெரும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மாநகராட்சி மேயர் சங்கீதா மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் முன்னதாக நெகிழி கழிவுகளை அகற்றுவது அதற்கு மாற்றான துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்த உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் விருதுநகர் கெளசிகா மகாநதி கரையோரம் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ஈடுபட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,தூய்மையான தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்தி ஆரோக்கியமாக வாழ ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை முறைப்படி அகற்ற வேண்டும்.நீர்நிலைகளையும் தூய்மைபடுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக ஒவ்வொரு மாதமும் 4 வது சனிக்கிழமை நெகிழியை அகற்றும் பணி தமிழகம் முழுக்க நடைபெற்று வருவதாகவும் இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார்.அடுத்த வரும் பட்ஜெட் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,இனி வருங்காலங்களிலும் திமுக அரசுதான் பட்ஜெட் போடும் என்றும் ஜி.எஸ். டி வந்த பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசு சென்றுவிட்டதால் பட்ஜெட் வரி இல்லாத பட்ஜெட்டாகத்தான் போட முடியும் என்றார்.

Similar News