புறவழிச்சாலை சர்வீஸ் சாலை மற்றும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் மீதும் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி

அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை சர்வீஸ் சாலை மற்றும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் மீதும் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு செயின் பறிப்பு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது*;

Update: 2025-01-25 15:46 GMT
அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை சர்வீஸ் சாலை மற்றும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் மீதும் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு செயின் பறிப்பு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை சர்வீஸ் சாலை பகுதியின் இருபுறமும் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், புறநகர் பேருந்து நிறுத்தம் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சர்வீஸ் சாலையின் இருபுறமும் உள்ள மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.‌ சர்வீஸ் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் பெண்கள் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் செயின் பறிப்பு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல காந்திநகர் புறவழிச்சாலை மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீதும் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த பகுதி மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், காந்திநகர் பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது. புறநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரவு நேரத்தில் இரவு நேரத்தில் ஏராளமான பயணிகள் இவ்வழியாக செல்கின்றனர். இப்பகுதியில் மின்விளக்குகள் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் கடந்த மூன்று மாதங்களாக இங்கு மின்விளக்குகள் எரியாமல் உள்ளது.‌ அதேபோல காந்தி நகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது அதையும் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Similar News