வருடாந்திர பராமரிப்பு பணி

கீழ்வேளூர் ரயில்வே கேட் 2 நாட்கள் மூடல்;

Update: 2025-01-26 06:15 GMT
தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை (27-ம் தேதி), வருகிற 28-ம் தேதி (செவ்வாய்) ஆகிய 2 நாட்கள் மட்டும், நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில்வே கேட் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (பகலில் மட்டும்) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருக்கும். எனவே, பொதுமக்கள் மாற்று வழியில் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News