கலவை அருகே குடிசை வீடு எரிந்து சேதம்
குடிசை வீடு எரிந்து சேதம்- போலீஸ் விசாரணை!;
கலவை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் காட்டுக்காவா அருகே கிருஷ்ணன் என்பவர் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்,எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.