அரக்கோணத்தில் ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது!
ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது;
அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது பிளாட்பாரத்தின் அருகே சந்தேகப்படும் வகையில் அங்கும் இங்கும் செல்போன் பேசியபடி சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த விவேகானந்தா (வயது 30) என்பதும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 8½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.