ஆற்காடு அருகே விபத்தில் வாலிபர் பலி!

தனியார் தொழிற்சாலை பஸ் மோதி வாலிபர் பலி;

Update: 2025-01-26 06:50 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா பெரியகுக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் டெல்லிராஜ் (வயது 25). இவ ரும் அவரது நண்பரான சூர்யா என்பவரும் சென்னை மயிலாப்பூரில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை செய்து வந்தனர். இருவரும், விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வந்தனர். ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் எதிரே உள்ள மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் செல்வதற்காக திரும்பிய போது, தனியார் கம்பெனி பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம் புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவம்னைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டெல்லிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News