கோவை: காமாட்சிபுரம் ஆதீனத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் !

கோவை,காமாட்சிபுரம் ஆதீனம் 51 சக்தி பீடத்தில் இன்று குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.;

Update: 2025-01-26 07:00 GMT
கோவை,காமாட்சிபுரம் ஆதீனம் 51 சக்தி பீடத்தில் இன்று குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான சே.மா. வேலுச்சாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இந்த நிகழ்வில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய ஒருமைப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் வலியுறுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய சே.மா. வேலுச்சாமி, இந்தியாவின் பன்முகத்தன்மையை போற்றி பேசினார். மேலும், இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News