குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.;
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர்,சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 133 பேருக்கு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசுத்துறையை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னாள் படை வீரர்கள் இருவருக்கு மொத்தம் 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.