இஸ்லாமியரின் முதுகில் குத்துவது திமுக என ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் விமர்சனம் செய்தார்.*
இஸ்லாமியரின் முதுகில் குத்துவது திமுக என ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் விமர்சனம் செய்தார்.*;
கருணாநிதி காலத்தில் இருந்தே இஸ்லாமியரின் முதுகில் குத்துவது திமுக என ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் விமர்சனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்மந்தபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அக் கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வருசநாடு வழியாக புதிய சாலை அமைக்க வேண்டும், திருச்சுழி அருகே நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அருப்புக்கோட்டையில் கிடப்பில் உள்ள இ3 சாலை திட்டத்தை தொடங்க வேண்டும், ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும், வக்ப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், போதை நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நஜ்மா பேகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தலித்துகள் படுகொலை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், கற்பழிப்புகள் அதிகமாகி வருகிறது. வட மாநிலத்தை போல் தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்களுக்கான வழிபாட்டு முறை மறுக்கப்பட்டுள்ளது. மதக் கலவரம் ஏற்படுத்தும் நோக்கில், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி முனைப்போடு செயல்படுகிறது. மதுரை ஆர்டிஓ புதிய விதிமுறைகள் ஏற்படுத்துகிறார். இது குறித்து தமிழக முதல்வர் எந்த கருத்தையும் கூறவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் குழந்தைகளுக்கு முடி எடுத்து அசைவம் சமைப்பது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. சிக்கந்தர் மலை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்பதற்கான அனைத்து சான்றும் உள்ளது என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழிபாட்டு முறை மறுக்கப்படுவது நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதா. இஸ்லாமிய காவலர் தாடி வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மேலதிகாரிகளும், அரசும் மேல் முறையீடு செய்கின்றனர். கருணாநிதி காலத்தில் இருந்தே இஸ்லாமியரின் முதுகில் குத்துவது திமுக. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இருப்பினும் எஸ்டிபிஐ க்கான கட்டமைப்பு வலுவாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அனைத்து சமூகங்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார். எதிர்கட்சி தலைவராக இருந்தால் தான் அனைத்து தரப்பு மக்களின் மீது ஸ்டாலினுக்கு அக்கறை இருக்கும். எனவே அடுத்த முறை அவர் எதிர் கட்சி தலைவராக மட்டுமே வருவார். பெரியார் குறித்து அவதூறு பேசிய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும். பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்க முடியாத ஸ்டாலின் அடுத்த முறை முதல்வராவது அவர் கனவில் கூட நடக்காது. காலம் மாறும்.