அதிநவீன நம்மவர் படிப்பகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தை கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்‌ திறந்து வைத்தனர்*

வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து உருவாக்கிய இணையதள வசதியுடன் கூடிய அதிநவீன நம்மவர் படிப்பகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தை கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்‌ திறந்து வைத்தனர்*;

Update: 2025-01-27 11:34 GMT
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிராமத்தில் வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து உருவாக்கிய இணையதள வசதியுடன் கூடிய அதிநவீன நம்மவர் படிப்பகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தை கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்‌ திறந்து வைத்தனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி கிராமத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் இணையதள வசதியுடன் கூடிய அனைத்து புத்தகங்களும் கொண்ட அதிநவீன நம்மவர் படிப்பகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தை வட அமெரிக்கா கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் மற்றும் கமல் பண்பாட்டு மையத்தினர் உருவாக்கியுள்ளனர். இந்த மையத்தில் போட்டி தேர்வர்கள் படிப்பதற்கான புத்தகங்கள், இணையதள வசதியை பயன்படுத்துவதற்காக கம்ப்யூட்டர்கள், சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவ மாணவியர்கள் வரை அனைவரும் படிக்கக்கூடிய வகையிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு கல்லூரணி கிராம மக்கள் ஒன்றிணைந்து நம்மவர் படிப்பக திறன் மேம்பாட்டு மையத்தின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த மையத்தினை கமல் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த நாராயணன் வள்ளியப்பன், அக்பர் அலி மற்றும் வட அமெரிக்க கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாக குழு உறுப்பினர் வெங்க்கி ரங்கநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News