காட்டுப் பண்டிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
காட்டுப் பண்டிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது;
காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும் ஊராட்சி மூலம் காட்டுப்பன்றிகளை சுட உத்தரவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில் விவசாய விளைபொருட்களை பாழாக்கும் காட்டுப் பன்றிகளை சிறப்பு தனிப்படை அமைத்து சுட்டுக் கொல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்னாள் ராணுவத்தினர், துப்பாக்கி உரிமம் உள்ளவர்கள் மூலம் விவசாயிகளே காட்டுப் பன்றிகளை சுட அனுமதி வழங்க வேண்டும், கேரள மாநில அரசு போல காட்டுப்பன்றிகளை சுட ஊராட்சிக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாச விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், திடீரென 25 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்தனர். ஆனால், புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது அது தொடர்ந்து சிறிது நேரம் நடந்த பேச்சுவார்த்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் டிராக்டர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன விவசாயிகள் டிராக்டர்களை அங்கு நிறுத்திவிட்டு 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடை பயணமாக வந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அர்ஜுனன் தலைவர் காவிரி வைகை விருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு