எம்ஜிஆர் அவர்களின் நூத்தி எட்டாவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

Update: 2025-01-27 11:44 GMT
இரும்பை கண்டுபிடித்தது தமிழர்கள் என ஸ்டாலின் கூறினார், அதற்கு ஈரோடு அருகே சிவகலையில் ஆய்வு செய்ய அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் எடப்பாடியார் நிதி ஒதுக்கினார்; அதிமுக அரசு செய்ததை ஸ்டிக்கர் ஒட்டி பில்டப் செய்கிறார் ஸ்டாலின் - திருச்சுழியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மா.பா.பாண்டியராஜன் பேச்சு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல் நிலையம் அருகே திருச்சுழி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.‌ அப்போது பேசிய அவர், திருச்சுழியில் ஓடும் கிருதுமால் நதியையும் குண்டாறு நதியையும் இணைப்பதற்காக கோதாவரியையும் வைகையும் இணைப்பதற்கு ரூபாய் 3,000 கோடியில் திட்டம் போட்டவர் எடப்பாடியார். அந்தத் திட்டத்தை பேப்பரில் வைத்துள்ள அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம். தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை திமுக நிறுத்தியுள்ளது. நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு தனது தொகுதியில் ஒரு புதிய தொழிற்சாலையாவது துவங்கி உள்ளாரா? இங்கு முன்னதாக பேசியவர்கள் ஸ்டாலின் பொய் கூறுவதைப் பற்றி பேசினார்கள். அதற்கு நான் ஒரே ஒரு உவமையை கூற விரும்புகிறேன். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மிகப்பெரிய பில்டப் போட்டு ஒரு பத்திரிக்கை சந்திப்பில் இரும்பு உருக்குவதை கண்டுபிடித்தது தமிழர்கள் என ஸ்டாலின் கூறினார். அதில் ஈரோட்டுக்கு பக்கத்தில் சிவகலை என்ற ஒரு ஊரில் ஆய்வு செய்தோம். அந்த ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் பெருமை கொள்வோம் என ஸ்டாலின் கூறினார். அந்த ஆய்வு அறிக்கையை பார்த்தால் அது நான் போட்ட அரசாணையாக உள்ளது. ஆனால் சிவகலையில் ஆய்வு செய்வதற்காக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அவர்தான் ரூ 12.5 கோடி நிதி ஒதுக்கினார். அமெரிக்காவில் கொண்டு சென்று சிவகலையில் கிடைத்த இரும்பு துகள்கள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த முடிவுகள் 2021 சட்டமன்ற தேர்தலில் ஒட்டி நமக்கு கிடைத்தது. ஆனால் தேர்தல் சமயத்தில் எதுவும் சொல்லக்கூடாது என்பதால் அந்த ஆய்வு அறிக்கையை நான்கு ஆண்டுகள் வைத்திருந்து இரும்பை கண்டுபிடித்தது தமிழர்கள் என ஸ்டாலின் கண்டுபிடித்தது போல பில்டப் செய்து அண்மையில் இருந்த அரசாங்கம் முயற்சி எடுத்தது என அவரே கூறுகிறார். அண்மையில் அதிமுக அரசாங்கம் தான் இருந்தது. அதிமுக அரசு செய்ததை ஸ்டிக்கர் ஒட்டி பில்டப் செய்து அதை உலக அளவில் செயல்படுத்துவது கேவலத்திலும் கேவலம். குடும்ப அரசியலின் விளை நிலம் ஆகிவிட்டது திமுக. டங்ஸ்டன் திட்டம் வரவிடாமல் பெரு முயற்சி மேற்கொண்டது அதிமுக தான். ஜாதி மத வித்தியாசம் இல்லாத ஒரே இயக்கம் அதிமுக தான். வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை எழுந்த உடன் உடனடியாக எந்த மக்கள் புகார் அளித்தார்களோ அதே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளது திமுக அரசு. தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழுகுமா. பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவில் கூட திமுக ஊழல் செய்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என பேசினார்.

Similar News