வாணியம்பாடி அருகே கணவனை இழந்து தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறித்த தனியார் வங்கி ஊழியர் கைது
வாணியம்பாடி அருகே கணவனை இழந்து தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறித்த தனியார் வங்கி ஊழியர் கைது;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கணவனை இழந்து தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறித்த தனியார் வங்கி ஊழியர் கைது வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் சேர்ந்தவர் லாவண்யா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் வாகன விபத்தில் கணவர் இறந்த நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் (HDFC) வேலைக்கு சேர்ந்த பொழுது அரக்கோணம் அடுத்த அரச நெல்லி குப்பம் பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்பவர் லாவண்யாவிடம் முதலில் அண்ணன் தங்கையாக பழகி ஒரு வருடத்திற்கு பிறகு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார் இதனால் அவருடன் பேசுவதை லாவண்யா தவிர்த்துள்ளார், இதனால் லாவண்யா தங்கியிருக்கும் அறையிற்க்கு சென்று தன்ராஜ் அவரது திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைகளை தூண்டி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை அடிக்கடி வீடியோ காலில் அழைத்து தொந்தரவும் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் லாவண்யா வாணியம்பாடியில் உள்ள தனியார் (HDFC) வங்கிக்கு பணிமாற்றம் செய்து வந்த நிலையில் தொடர்ந்து, லாவண்யாவை தன்ராஜ் வற்புறுத்தி வாணியம்பாடியிற்க்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார், அதனை தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு பகுதியில் தன்ராஜ் என்பவருக்கும் மற்றொரு பெண் இருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்வதை அறிந்த லாவண்யா அங்கு சென்று தன்ராஜ் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், அப்பொழுது லாவண்யாவை தன்ராஜின் குடும்பத்தினர் கொலை செய்து விடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர், இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்ராஜ் அண்ணன் யுவராஜ் என்பவர் லாவண்யாவிற்கு ஃபோன் செய்து தன்ராஜை திருமணம் செய்து வைப்பதாகவும் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார், அப்பொழுது தன்ராஜிற்கு பத்தாயிரம் ரூபாய் லாவண்யா அனுப்பி வைத்துள்ளார், அதனை தொடர்ந்து வாணியம்பாடியிற்கு தன்ராஜை அவரது அண்ணன் யுவராஜ் அழைத்து வந்து ஏலகிரி மலை அடிவாரத்தில் லாவண்யாவையும், தன்ராஜையும் தனியாக இருக்கும் படி கூறிவிட்டு, அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு மீண்டும் தன்ராஜ் மற்றும் அவரது அண்ணன் அரக்கோணத்திற்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் 10 மேற்பட்ட அடியாட்களை அழைத்துக்கொண்டு வந்த தன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அம்பலூர் காவல் துறையினர் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்து நீங்கள் வேறு சமூகம் நாங்கள் வேறு சமூகம் எனக் கூறி தன்ராஜ் திருமணம் செய்து வைக்க முடியாது எனவும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக தருவதாகவும், இல்லையென்றால், லாவண்யா மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர், இந்நிலையில் தன்ராஜிற்கும் மற்றொரு பெண்ணிற்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்ராஜை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு லாவண்யா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் தன்ராஜை வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து லாவண்யாவிடம் பணம் பறித்த யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..