ஜெயங்கொண்டம் சௌடாம்பிகா பள்ளியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு.

ஜெயங்கொண்டம் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்;

Update: 2025-01-30 09:29 GMT
அரியலூர், ஜன.31 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சௌடாம்பிகா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் அரியலூர் மாவட்ட ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் கலந்துகொண்டு தொழுநோய் குறித்தான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார் அப்பொழுது தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்க வேண்டும் அவர்களை ஒதுக்க கூடாது தொழுநோய் கண்டறிந்தவுடன் அதற்குரிய சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும் தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். இதில் பள்ளி முதல்வர் சித்ரா ராமன் களப்பணியாளர் விஜயகுமார் சுகாதார ஆய்வாளர் முத்து பரசுராமன் உள்ளிட்ட மாணவர்கள் தொழுநோய் குறித்தான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி பெற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News