மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் தொடங்கி வைத்தார் அமைச்சர்
பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி நலத்திட்ட உதவியும் வழங்கினார் அமைச்சர்;
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாமினை இன்று (30.01.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டனர். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு மற்றும் பலர் உள்ளனர்.