அரசுப் பள்ளியில் உலக ஈர நிலம் தின விழா

அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி என பல போட்டிகள் வைக்கப்பட்டன;

Update: 2025-01-30 12:56 GMT
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 30-01-2025 இன்று உலக ஈர நிலம் தின விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். பெரம்பலூர் வனத்துறை சரகர் பழனிகுமரன் , ஈர நிலம் தமிழ்நாட்டில் 18 இடங்களில் உள்ளன வேடந்தாங்கல், கரைவெட்டி இது போன்று பல இடங்கள் உள்ளன. நிலத்தை பாதுகாக்க வேண்டும், குளம், குட்டை ஏரி களை தூர்வார வேண்டும்.மரம் வளர்க்க வேண்டும் , மழை பெற வேண்டும். என்று கருத்துரையில் விளக்கினார். வேப்பந்தட்டை வன சரகர் சுதாகர் நிலத்தடி நீர்களை பராமரிக்க வேண்டும் என்று கூறினார். வனத்துறை பாதுகாப்பாளர் ஆசிரியர்கள் & மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி , ஓவியப் போட்டி சுலோகன் எழுதும் போட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு 02-02-2025 அன்று நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.

Similar News